Monday 5 January 2015

எடுத்தது எங்கே 18



முதல்வன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் ‘உப்புக் கருவாடு ஊறவச்ச சோறு ஊட்டிவிடு நீ எனக்கு’ என்ற பாடல் காட்சியில் ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேட்டி

சட்-டை-யை கதாநாயகியும், கதாநாயகியின் பாவாடை தாவணியை கதாநாயகனும் அணிந்து மகிழ்வார்கள்.

காதலர்களும், அன்புடைய புதிய தம்பதி-கள் இப்படி உடையை மாற்றி அணிந்து-கொள்வது இன்று நேற்றல்ல, சங்ககாலம் தொட்டு இந்தப் பழக்கம் இருந்து வருகிறது.

சங்க இலக்கியமான ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள பட்டினப் பாலையில் ஒரு பாடல்.

துணைப் புணர்ந்த மடமங்கையர்

பட்டு நீக்கித் துகில் உடுத்து,

மட்டு நீக்கி மது மகிழ்ந்து,

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,

மகளிர் கோதை மைந்தர் மலையவும்

என்று வரும் அந்தப் பாடல்.

இதன் பொருள்....

துணைவரைக் கூடி மகிழும் மங்கையர், பகல் நேரத்தில் அவர்கள் அணிந்-திருந்த பட்டாடையை நீக்கி பருத்தி ஆடையை அணிவர். தலைவன், மது அருந்துவதை தவிர்த்து, காதல் இன்பத்தில் திளைப்பான். அவன் அணிந்திருந்த மாலையை அவ-ளும், அவள் அணிந்திருந்த மாலையை அவனும் அணிந்து மகிழ்வார்கள்.

இதில்

பட்டு நீக்கித் துகில் உடுத்து

என்பது இங்கே மிக முக்கி-யமான வரி. இந்த வரிக்கு இரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர்.

மணமான மகளிர், பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, மென்-மையான பருத்தி ஆடையாகிய துகில் அணிகிறார்கள் என்பது ஒரு விளக்-கம்.

பெண் தன்னுடைய பட்டாடையைக் களைந்துவிட்டு, கணவனின் ஆடையை அதாவது துகிலை அணிகிறாள் என்பது இன்னொரு விளக்கம். இப்படி ஆணும் பெண்ணும் ஆடைகளை மாற்றி அணிந்து மகிழும் வழக்கம் சங்க காலம் தொட்டு இருந்துவருகிறது.

இதைத்தான் ‘அலைபாயுதே’ படத்தில் வரும் ‘சிநேகிதனே... ரகசிய சிநேகிதனே’ பாட்டில் எடுத்தாண்டுள்ளார் வைரமுத்து. சிநேகிதனே பாடலில்

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்

நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்

காதில் கூந்தல் நுழைப்பேன்

உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்

நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்

என்று வரும். இதில்,

‘உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்’ என்பது, அவன் சட்டையை அவள் அணிந்து மகிழ்வதைச் சொல்-கிறாள். ‘பட்டு நீக்கித் துகில் உடுத்து’ என்-பது-தான் இங்கே இப்படி சொல்-லப்-பட்-டுள்-ளது.

மதுரை அமெரிக்கன் கல்லுõரியில் கவியரசர் கண்ணதாசன் தலைமையில் ஒரு கவியரங்கம்.

கண்ணதாசன் கவிதை படிக்கும் முன்பு ஒரு மாணவர் கவிதை படித்தார். எந்த கைத்தட்டலும், ஆரவார வரவேற்பும் இல்லை. அவரது கவிதை வரிகளை பெரி-தாக ரசிக்கவும் இல்லை. அடுத்து கண்ண-தா-சன் கவிதை வாசித்தார். வரிக்கு வரி பலத்த கைத்தட்டல். மகிழ்ச்சி ஆரவாரம். கவிதையைப் படித்து முடித்த பின் கண்-ணதாசன் பேசினார். அவர்

சொன்னது:

நான் வாசித்த கவிதைக்கு இந்த அளவுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு கண்டு மகிழ்கிறேன். அது நான் வாசித்த கவிதைதான். நான் எழுதிய கவிதை அல்ல. எனக்கு முன் கவிதை படித்தாரே ஒரு மாணவர் அவர் எழுதிய கவிதை-யைத்-தான் நான் படித்தேன். அவர் படித்தது நான் எழுதிய கவிதையை. நான்தான் அப்-படி செய்யச் சொன்னேன். அந்த மாணவர் எழுதிய கவிதையை நான் படித்த போது கைதட்டிய நீங்கள், என் கவிதையை அந்த மாணவர் படித்தபோது கைதட்டவே இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது. யார் சொல்கிறார் என்றுதான் பார்க்கிறீர்கள். என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்-ப-தில்-லை நாம். யார் சொன்னாலும் நல்ல வரி-க-ளை வரவேற்க வேண்டும். பிரபல-மான-வர்-கள் சொன்னால்தான் வரவேற்பது என்ற நம் மனநிலை மாறவேண்டும்.

கண்ணதாசனின் இந்தப் பெருந்-தன்-மைக்கு யாராவது நிகர் உண்டா?

-எடுத்தது வரும்.

2 comments:

  1. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கவிஞர் கண்ணதாசன் செய்த குறும்பை மிக இரசித்தேன்.

    ReplyDelete
  2. //பிரபல-மான-வர்-கள்//

    நிறைய வார்த்தைகளின் இடையே சிறு கோடுகள் (ஹைஃபன்) எதற்கு சார்? 'பிரபலமானவர்கள்' என்றுத் தானே குறிப்பிடல் சரி?

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_