Monday 5 January 2015

எடுத்தது எங்கே?- 17



அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் எலைன் பேஜெல்ஸ். எம். ஏ. படித்து முடித்தபின், ஹார்வர்டு பல்கலைக்-கழகத்தில் டாக்டர் பட்டத்துக்காக சமயங்கள்பற்றி ஆய்வு செய்தார். அவர் எழுதிய THE GNOSTIC GOSPELS என்ற நுõல் சிறந்த நூலுக்கான தேசிய விருது பெற்றது. இந்த நுõலில் வரும் ஒரு சிறு ஆங்கிலக் கவிதை

I am the first and last

I was the honored one and the scorned one

I am the whore and the holy one

I am the wife and the virgin ...

I am the barren one,

and many are my sons ...

I am the silence that is incomprehensible

I am the utterance of my name.

இதன் பொருள்

ஆதியும் நான் அந்தமும் நான்

புகழப்பட்டவனும் நான்

இகழப்பட்டவனும் நான்

புனிதனும் நான் அற்பனும் நான்

காதல் மனைவியும் நான்

கன்னிப் பெண்ணும் நான்

மலடியும் நான்- குழந்தைகள்

பலரின் தாயும் நான்

புரியாத மவுனமும் நான்- என் பெயரை

உறக்கச் சொல்லும் சத்தமும் நான்

இந்தக் கவிதையை வாசித்ததும் உங்களுக்கு ஏதோ நினைவுக்கு வரு-கிறதா? வரணுமே... ‘கன்னத்தில் முத்த-மிட்டால்...’ படத்தின்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே

பாடல் நினைவுக்கு வருகிறதா? ஆம் அதில் வரும் வரிகளைப் பாருங்கள்...

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!

பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!

மரணம் மீண்ட ஜனனம் நீ!

எல்லாம் முரணாக அமைந்திருக்-கி-றதா? எலைன் பேஜஸ் எழுதிய கவிதை-யில் வரும் அதே முரண்தான்.

ஆதியும் நான் அந்தமும் நான்

புகழப்பட்டவனும் நான்

இகழப்பட்டவனும் நான்

புனிதனும் நான் அற்பனும் நான்

என்ற வரிகள்தான் உருமாற்றம் பெற்று வைரமுத்து எழுதிய பாடலில்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!

காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!

என்று முரண்களாக முகிழ்கின்றன.

இதே முரணை டூயட் படத்தில் வரும் ஒரு கவிதையிலும் பயன்படுத்தியிருப்பார் வைரமுத்து.

காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்- நான்

காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்

என்று இரண்டு எதிர்மறையுமே அவள் என்று முரண் வைத்து எழுதியுள்ளார்.

(எடுத்தது வரும்)



No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_