Tuesday 6 January 2015

குறும்பு-12



விருத்தாசலம் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றுகொண்டிர்ந்தபோது, விலங்கியல் பேராசிரியர் ஒருவர் என்னோடு நன்றாக பழகுவார். சில நாட்கள் மதியம் சாப்பாடு வாங்கி வரசொல்வார். டவுனுக்குப் போய் சாப்பாடு வாங்கிவர அவருடைய சைக்கிளைக் கொடுப்பார். போய் வாங்கி வந்து தருவேன். ஒரு நாள், நான் சாப்பிடப் போக சைக்கிள் கேட்டேன். தர மறுத்துவிட்டார்.

உங்களுக்குன்னா தருவிங்க. எனக்குன்னா தர மாட்டிங்களா? மாட்டாமலா போய்டுவிங்க பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
ஒருநாள் விலங்கியல்துறை ஆய்வகம் வழியாக போய்க்கொண்டிருந்தேன். அந்த பேராசிரியர் ஒரு மாணவியை அழைத்து, ‘’காட்டு காட்டுன்னு சொல்றேன் காட்ட மாட்டேங்கிற. ஒரு நாள் இருக்கு உனக்கு’’ என்று கண்டித்துக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட நான், ‘சார் ஒரு நிமிஷம் இங்க வாங்க” என்று அழைத்தேன். வந்தார்.

உங்ளைக் கண்டித்து ஸ்டிரைக் பண்ணப்போறோம் என்றேன் ( நான் அழைத்தால் எல்லா மாணவர்களும் வந்துவிடுவார்கள்) என்றேன். என்னப்பா பிரச்னை? என்று அலறினார் பேராசிரியர்.
இப்ப அந்த மாணவிகிட்ட என்ன சொன்னிங்கன்னு கேட்டேன். அவர் சொன்னதை திருப்பிச் சொன்னார்.
ஒரு மாணவியிடம் இப்படி இரட்டை அர்த்தத்தில் ஆபாசமா பேசுறிங்களே..அதுக்குத்தான் உங்களுக்கு எதிரா ஸ்டிரைக் பண்ணப் போறோம் என்றேன்.
ரெக்கார்டு நோட்டு காட்டலன்னுதான்பா அப்படி கேட்டேன். தப்பால்லாம் சொல்லலப்பா என்றார் பேராசிரியர்.
பேசிட்டு தப்பா பேசலன்னு சொன்னா விட்டுடுவோனா என்றேன்.
சைக்கிள் தரலன்னு இப்படி வம்புல மாட்டிவிட்டுடாதப்பா..எப்ப வேணும்னாலும் சைக்கிள் எடுத்துகிட்டு போ....என்னை அசிங்கப் படுத்திடாதே...தப்பான அர்த்தத்தில் நான் பேசலை என்று கெஞ்சினார் அவர். சரி சார் விட்டுடுறேன். இனிமேல் கவனமா பேசுங்கன்னு சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு வாரத்துல 3 நாள் டவுனுக்கு போவோம். அவர் சைக்கிள்லதான்.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_