Wednesday 7 January 2015

தமிழ் விளையாட்டு -17



சிலரின் இயல்பை மாற்றவே முடியாது. எதை எழுதினாலும் ஏதாவது ஒரு கருத்தில் வந்து நிற்பார்கள். அந்த குறிப்பிட்ட கருத்து இல்லாமல் அவர்களால் எழுதவோ பேசவோ முடியாது. இயல்பாகவே அவர்கள் மனதில் உள்ள கருத்து வந்து விழுந்துவிடும்.
கண்ணதாசனும் அப்படித்தான். கவியரசரிடம் ஒருமுறை, கவிதை கேட்டார்கள். கவிதையில் பாலியல் தொடர்பான் கருத்து வரக் கூடாது என்பதற்காகவே ‘மறுமலர்ச்சி’ என்று தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னார்கள். எது எதெல்லாம் எது எதற்கு மறு மலர்ச்சி என்று சொல்லிக் கொண்டே வந்த கவியரசர்,

“பூப்பெய்தும் காலம்தான்
பெண்ணுக்கு மறுமலர்ச்சி”

என்று கவிதையை முடித்தார்.

‘ஒருகையில் மதுவும்
மறுகையில் மங்கையும்
சேர்ந்திருக்கும் வேளையில்
என்னுயிர் பிரிந்தால்தான்
என்வாழ்க்கை நிஜமாகும்.
இல்லையேல்
ஏனடா பிறந்தாய் என்று
எமன் எனைப் பார்த்துச் சிரிப்பான்”

என்று எழுதியவரல்லவா கவியரசர். அவர்கிட்டேவா?

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_