இன்று முதல், திருக்குறளை புதுக்கவிதை பாணியில் சொல்ல முயற்சிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துகளுடன். இந்த முயற்சி வெற்றி பெற எப்போதும் போல நீங்கள் துணை நிற்க வேண்டுகிறேன்.
முப்பாலில் முதலில் மூன்றாம் பாலை எழுதுகிறேன். கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்; எனவே, எழுதுவதில் அதிகம் சிரமம் இருக்காது என்பதால்தான். இதை எழுதி முடித்தால், இந்த அனுபவம் மற்ற இரண்டு பால்களையும் சுவாரசியமாக எழுத கை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
மூன்றாம் பாலில் 25 அதிகாரம். 250 குறள்கள். ஒரு நாளைக்கு ஒரு குறள் என்று வைத்தாலும் 250 நாட்கள் ஆகும். இடையிலே சில நாட்கள் எழுத இயலாமல் போகும். எப்படி கணக்கிட்டாலும் 300 நாட்கள்; 10 மாதம் ஆகும் முடிக்க. ஒரு தாய் கருவைச் சுமந்து பெறுபவது போல. இது ஒரு தவம். எழுதி முடித்தால் அது ஒரு வரம். தெய்வப் புலவர் திருவள்ளுவரே வாழ்த்தி வார்த்தைகள் எடுத்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடனும் உங்கள் வாழ்த்துகளுடனும் தொடங்குகிறேன்.

No comments:
Post a Comment
தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_