Tuesday 6 January 2015

எடுத்தது எங்கே 19



கோடை வெயில் கொளுத்துகிறது. ஒரு பாறை மேல் ஒரு பெரிய வெண்ணை உருண்-டை வைக்கப்பட்டுள்ளது. வெயி-லில் அது உருகுகிறது. அதன் முன் ஒருவன் நிற்-கிறான். அந்த வெண்ணை உருகி வீணா-கா-மல் பாதுகாக்க வேண்டும். அவனுக்கோ இரண்டு கைகளும் இல்லை.

வெண்--ணை-யை அவனால் வேறு

இடத்-துக்கு எடுத்துச் செல்ல முடியாது. யாரையாவது அழைத்து அதை எடுத்து நிழலில் வைக்கச் சொல்லலாம் என்றால், அவன் பேசும் திறன் அற்றவன். கையில்-லாத-தால் சைகையாலும் யாரையும் அழைக்க முடியவில்லை.

கைகள் இல்லாத, வாய் பேசமுடியாத ஒருவன், பாறைமீது வெயிலில் உருகும் வெண்ணையை பாதுகாக்க முடியாமலும், அதைப்பற்றி பிறரிடம் சொல்லவும் முடியா-மலும் எப்படி தவிக்கிறானோ அதைப் போல, காதல் நோயைப் பொறுத்-துக் கொள்ள முடியாமலும், யாரிடமும்

சொல்ல முடியாமலும் தவிக்கிறான் தலை-வன்.

இது சங்க இலக்கியப் பாடல் ஒன்றின் கருத்து இது. வெள்ளிவீதியார் என்ற புலவர் எழுதியது.

குறிஞ்சித் திணையின் அந்தப் பாடல் இதோ...

இடிக்கும் கேளிர்! நும்குறை யாக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன், தில்ல

ஞாயிறு காயும் வெவ்அறை மருங்-கில்

கை இல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்-ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே.

இதே பொருள் கொண்ட திரைப்பாடல் ஒன்று உண்டு. அது இதோ...

செந்தீ விழுந்த

செம்-பொற் பாறையில்

மந்தி உருட்டும் மயிலின்

முட்டையாய் இதயம்

உடலில் இருந்து விழுந்து

உருண்டு புரண்டு போகுதே

மேலே சொன்ன சங்கப்பாடலின் உருமாற்றம்தான் இந்தப் பாடல் என்பது படிக்கும்போதே புரிகிறதல்லவா? இந்தப் பாடல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கி-றதா? நிச்சயமாக நீங்கள் கேட்டிருக்க மாட்-டீர்கள். காரணம், இந்தப் படமே இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படித்திருப்பீர்கள்.

ஆமாம், கோச்சடையான் படத்துக்கு வைரமுத்து எழுதியுள்ள பாடல்தான் இது. சமீபத்தில் வார இதழ் ஒன்றில், தான் எழுதிய அற்புதமான பாடல் என்று சிலா-கித்து, இந்தப் பாடலை கொடுத்திருந்தார் வைரமுத்து.

இந்த பாடலில் அடுத்த பகுதி இதோ....

சிறுகோட்டுப் பெரும்பழம்

துõங்கியாங்கு

என் உயிரோ சிறிதே

என் காதலோ பெரிதே

இந்த வரிகளும் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? இருக்கும்.

மண்வாசனை படத்தில் வரும் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலில்,

‘சின்னக் காம்புதானே பூவத் தாங்குது’ என்ற கருத்து கபிலர் எழுதிய குறுந்தொகைப்பாடலின் உரு-மாற்-றம் என்று ஏற்கனவே சொல்லி-யிருக்-கி-றேன் அல்லவா? அதுதான் இது.

கோச்சடையானில் குறுந்தொகைப் பாடல் வரிகளை அப்படியே எடுத்துப் போட்டுள்ளார்.

வரல் வேலி வேர்கோட் பலவின்

சார னாட செவ்வியை யாகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழந் துõங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

இதுதான் அந்தக் குறுந்தொகைப் பாடல். ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகள்தான் வைரமுத்துவின் பாடல். சங்க இலக்கியம் போல பாடல் இருக்கவேண்டும் என்று இயக்குனர் கேட்டிருப்பார் போலும். போல எதற்கு சங்க இலக்கியத்தையே தருகிறேன் என்று எடுத்துக்கொடுத்துவிட்டார் கவிப்பேரரசு.

(எடுத்தது வரும்).




1 comment:

  1. அழகான ஆராய்ச்சி. மிகுந்த சுவை..!ஆஹா அருமை. பாராட்டுக்கள்..!

    ReplyDelete

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_