Tuesday 6 January 2015

குறும்பு-13



அதே வாழ்த்தும் பேராசிரியர். ஒரு நாள் இலக்கண வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். பேராசிரியர் பாடம் நடத்தும்போது, இலக்கண நூலை மாணவர்களும் வைத்துக்கொண்டு கவனித்தால்தான் பாடம் புரியும். ஒரு மாணவர், இடம் மாறி இன்னொரு மாணவர் அருகில் போய் அமர்ந்தார். ‘வகுப்பு நடக்கும்போது எதுக்கு இடம் மாறின?” என்று கேட்டார் பேராசிரியர். ‘என்னிடம்புத்தகம் இல்லைங்க ஐயா. அவன் புத்தகத்தை பார்த்துக்கலாம்னு இடம் மாறினேன்’’ என்றார் அந்த மாணவர்.
உடனே இன்னொரு மாணவி ‘எங்கிட்டயம் புத்தகம் இல்லை சார்’ என்றார். நான் உடனே, ‘’புத்தகம் இல்லாதவங்க எங்கிட்ட வந்து உட்காரலாம்” என்றேன். வந்தது கோபம் பேராசிரியருக்கு. ‘இது வகுப்புன்னு நினைச்சியா? என்ன நினைச்ச?” என்று கோபமாக கேட்டார்.
‘என்னங்கய்யா தப்பா சொல்லிட்டேன்?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘’உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கலாம். அதெல்லாம் வகுப்புல வச்சுக்க கூடாது” என்றார்.
‘’ஐயையோ அபாண்டமா பேசுறிங்களே...ஒரு ஆசிரியர் பேசுற பேச்சா இது?” என்று பதறினேன் நான்.
‘’என்ன அபண்டமா சொல்லிட்டேன்?’ என்று கேட்டார்.
ஒரு பொண்ணையும் பையனையும் பார்த்து, உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கலாம்னு சொன்னா என்னங்கய்யா அர்த்தம். கேட்கிறவங்க என்ன நினைப்பாங்க? என்னைவிடுங்க... அந்தப் பொண்ணோட வாழ்க்கை என்னாகிறது?” என்று கேட்டேன்.
அந்தப் பெண்ணும், ‘அதானே..அவர் தப்பு செய்தா அவரை மட்டும்தானே நீங்க கண்டிக்கணும். எனையும் சேர்த்து எப்படி அபாண்டமா சொல்லலாம்?’ என்று பிடித்துக்கொண்டார்.
‘இப்ப என்ன பண்ணனும்னு சொல்றிங்க இரண்டு பேரும்?” என்று கேட்டார் பேராசிரியர். ”சொன்னதை வாபஸ் வாங்கணும். மண்ணிப்பு கேட்கணும்” என்றேன். அவருக்கு கோபம் இன்னும் அதிகமானது.

பிறகென்ன? மூன்று மணிக் காட்சிதான். நானும் இன்னொரு மாணவரும்தாங்க.


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_