Tuesday 25 November 2014

குறும்பு-3



விருத்தாசலம் அரசு கலைகல்லூரியில் நான் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தபோது மருதூர் இளங்கண்ணன் என்றொரு பேராசிரியர் இருந்தார். ஆழ்ந்த புலமை மிக்கவர். பாடல் எழுதி சங்க இலக்க்கியத்தில் கலந்துவிட்டால், வேறுபாடு காண முடியாது. அப்படி எழுதுவார். அவருடைய உரைநடையை புரிந்துகொள்ளவே சிரமப்படணும். கொஞ்சம் பழமை வாதி. படித்து முடித்து 20ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளேன். அக்கரையோடு விசாரிப்பார். ஆனால், படிக்குபோது அவருக்கும் எனக்கும் ஒத்துப் போகாது.
அவர் எங்களுக்கு நடத்திய பாடம் சிலப்பதிகாரம் . ஒரு நாள் வகுப்புக்கு வந்தார்,
‘போன வகுப்புல கடைசியா என்ன சொன்னேன்?’ என்று கேட்டார்.

‘அடுத்த வகுப்புல பார்க்கலாம்னு சொன்னிங்க’ என்றேன்.

வந்ததே கோபம் அவருக்கு, வழக்கமாக என்னப் பார்த்து அவர் சொல்லும் வாழ்த்துச் சொல்லை சொன்னார். அட அதாங்க....

‘நீ உருப்படவே மாட்ட...


No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_