Friday 10 April 2015

உள்ளுறையே நீதான்.

என் கவிதை நூலின்
மேல் உறையில்கூட
உன் பெயர்
இருக்கக் கூடாது என்கிறாய்.

உனக்குத் தெரியாது....
என் கவிதையின்
உள்ளுறையே நீதான்.

சந்திப்பே பிழையென்றால்...

தமிழாசிரியராய் இருக்கத்
தகுதியே இல்லை
உன் தந்தைக்கு...

”என்னுயிர் கதலிக்கு”
என்று நான்
எழுதியதைப் படித்துவிட்டு
சந்திப் பிழை என்று
சொல்லியிருந்தால்
சம்மதித்திருப்பேன்.

நம்
சந்திப்பே
பிழை என்கிறாரே......

தொல்காபியம் படித்த
உன் தந்தையைக் கேட்டுப் பார்
”உடன் போக்கு” என்றால் என்னவென்று.

என்னுக்குள் எனைக்காட்டும் கருவிழியே

என்
கண்ணுக்குள் அமர்ந்த
கவிதையே

என்னுக்குள் எனைக்காட்டும்
கருவிழியே

என்
மனத்துக்குள் ஒலிக்கின்ற
மணியே.

எதைப் பார்க்கின்றாய்?
ஏன் இங்கு வைத்தேனென்றா?

பொன்னுக்குள் வைத்தாலும்
போதாது என்றே
கண்ணுக்குள் வைத்தேன்
கருவிழியே உன்னை.